சமந்தாவின் ஆடையில்லாத படம்? அதிர்ச்சியில் திரையுலகம்
																																		தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டு, நடிப்பிலும் போட்டோ ஹூட்டிலும் பிசியாகி விட்டார்.
எனினும், சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.
இந்த நிலையில், இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை சமந்தா வெளியிட்டிருக்கிறார். அதில், நோயிலிருந்து குணமாவதற்கான சிகிச்சை குறித்த புகைப்படமும் குளியல் தொட்டியில் நிர்வாணமாக உடல்பாகங்களை மறைத்தபடியான படத்தையும் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், உடனடியாக இரண்டாவது புகைப்படத்தை அவர் நீக்கிவிட்டதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை, சமந்தாவிடமிருந்து இப்படியான புகைப்படம் வெளியானதில்லை என்பதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், இப்படம் போலியாகச் சித்திரிக்கப்பட்டது என்கிற கருத்துக்களும் பரவி வருகின்றன.

        



                        
                            
