பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (03) மாலை 6.16 மணியளவில் கடலோர நகரமான துலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இதுவரை சொத்து சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை.
(Visited 7 times, 1 visits today)