இலங்கை

கிளிநொச்சி- கிராம சேவையாளர் அலுவலக வளாகத்திலேயே ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த மரணம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!