ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!
ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கைமைய, ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மேலதிகமாக உயர் கல்வி பாடம் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேலதிகமா ஒரு பாடம் ஒன்று சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தினுடைய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதாவது அபுடு என்று சொல்லப்படுகின்ற கா பொ த உயர் தர பரீட்சைக்கு தற்பொழுது 4 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெகு விரைவில் 5 பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கின்றார்.
இதேவேளையில் மற்றைய மாநிலங்களும் இவ்வாறு உயர் தர பரீட்சைக்குரிய பாடத்தில் ஒரு பாடத்தை இணைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்கு இடையில் பல மாநிலங்களில் உயர் தர பாடங்களைாக 5 பாடங்களை உள்ளடக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.