சீனாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்!
BY VD
April 6, 2024
0
Comments
123 Views
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு.
இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர் என்று தன்னை கருதி உள்ளார்.
மேலும் அங்குள்ள பெண்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கருதி உள்ளார். இந்த விசித்திரமான காதல் நோய் அறிகுறி முற்றி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் அந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.
பின்னர் தான் அவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதை கண்டுபிடித்தனர்.
அவரது இந்த விசித்திர நோய் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது, பணத்தை வீண் விரையம் செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்து வருவதும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்