இந்தியா செய்தி

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூட்டில் இரு தமிழர்கள் பலி! வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், இரண்டு தமிழர்கள் உட்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.அதனைக் கேட்டு அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. ஆனால் உள்ளே பயங்கரவாதிகள் யாரும் இல்லை.

இதற்கிடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் நான்கு ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25, சாகர் பன்னே (25) என்பது தெரிய வந்தது.

பீரங்கி படையை சேர்ந்த நால்வரும் சாப்பாட்டு கூடத்திற்கு பின்னால் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களில் கமலேஷ் தமிழக மாவட்டம் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும், யோகேஷ் குமார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி