இலங்கையில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
அத்துடன் குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.
(Visited 20 times, 1 visits today)