உலகம்

தெற்கு ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 21 பேர் பலி!

தெற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு காந்தஹார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று (17.03) காலை குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த  38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!