இலங்கை

2 வருடங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார சபையின் 159 பொறியியலாளர்கள்

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (15) தெரிவித்துள்ளார்.

மற்றும் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறியியலாளர் பிரிவில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுமுறை பெற்று வெளிநாடுகளில் தொழில் புரியும் அதிக எண்ணிக்கையான பொறியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்