இந்தியா

இந்தியாவில் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை ஆரம்பம்!

இந்தியாவின்  நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது

நீருக்கடியில் மெட்ரோ ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று நிலத்தடியில் உள்ளன.

மெட்ரோ 520 மீ ஆற்றை வெறும் 45 வினாடிகளில் கடந்து செல்கிறது, இது விரைவான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை உறுதியளிக்கிறது.

இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே