பொழுதுபோக்கு

குட்டித் தளபதி இயக்கும் படத்தின் ஹீரோ இந்த நடிகரின் மகனா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும், படத்தின் ஹீரோ பற்றிய புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த போதும், தன்னுடைய தாத்தாவை போல் ஒரு இயக்குனராக தான் ஆவேன் என, சினிமா மேக்கிங் குறித்த படிப்பை லண்டனில் படித்து முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பியதும் தன்னுடைய முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் சஞ்சய் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

சஞ்சய்யில் முதல் பட ஹீரோ யாராக இருக்கும் என்கிற விவாதம் தொடர்ந்து ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இதில் விஜய் சேதுபதி, கவின் உட்பட சில நடிகர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து, எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இதையடுத்து தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான். இவர் கதாநாயகனாக அறிமுகமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் இயக்குனர் பாலாவால் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளான நிலையில், மீண்டும் இந்த படத்தில் துருவ் நடித்தார்.

ஆனால் பட்ட கஷ்டத்திற்கு இந்த படம் பலன் கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தந்தையுடன் நடித்த மகான் படமும் வெற்றிபெறாமல் போனது.

அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப்படம் இரண்டு வார்ஸிகளுக்குமே கொடுக்குமா? எந்த அளவுக்கு இந்த தகவல் உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!