இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் நடந்த மோதலில் 8 மாவோயிஸ்டுகள் உட்பட 9 பேர் மரணம்

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காடுகளில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் எட்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்களாக மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகிறது.

“ஒரு ஜவான்(பாதுகாப்புப் படை வீரர்) பணியின் போது தனது உயிரை இழந்தார், அதேசமயம் இருவர் காயம் அடைந்துள்ளனர்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மோதலில் ஏராளமான மாவோயிஸ்டுகளும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அபுஜ்மத் காடுகளின் குதுல், ஃபராஷ்பேடா மற்றும் கோட்டமேடா பகுதிகளில் இந்த மோதல் நடந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி