அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றம் ஒத்திவைப்பு : ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் (15) விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நிகழவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணைக்கைதிகள் அனைவரும் அந்தக் காலக்கெடுவுக்குள் விடுவிக்கப்படாவிட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை தாம் ரத்து செய்யவேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றத்தை ஒத்திவைக்கப்போவதாக ஹமாஸ் போராளிக்குழு மிரட்டியதைத் தொடர்ந்து, டிரம்ப் அந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய […]













