இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – 4 மணிக்கு முன்னதாக வாக்களிக்குமாறு கோரிக்கை

  • September 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பை மாலை 4 மணிக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என அனுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அனுராதபுரத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. 636 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். அநுராதபுரம் மாவட்டத்தில் எவ்வித பிரச்சினையுமின்றி வாக்களிப்பு இடம்பெறும் என அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சித் விமலசூரிய மேலும் தெரிவித்தார்.

ஆசியா செய்தி

ஜப்பானில் திடீரென்று பிரிந்து சென்ற அதிவேக ரயில் பெட்டிகள்

  • September 21, 2024
  • 0 Comments

ஜப்பானில் 320 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த Shinkansen எனும் அதிகவேக ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதன் 2 வண்டிகள் திடீரென்று பிரிந்துசென்றன. ரயிலில் இருந்த 320 பேரில் யாரும் காயமடையவில்லை என்று NHK செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் திகதி காலை மியாகி பகுதியில் ஃபுருக்காவா (Furukawa) நிலையத்துக்கும் செண்டாய் (Sendai) நிலையத்துக்கும் இடையே ரயில் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 2 வண்டிகளையும் இணைக்கும் பகுதி கழன்றுகொண்டது. அதை அடையாளம் கண்ட ரயிலின் […]

இலங்கை

இலங்கையில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்குப் பதிவுகள்!

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டவர், இதுவரையில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பான எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன. இதன்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிவரையில் இடம்பெறவுள்ளன.

இலங்கை

இலங்கையில் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம்

  • September 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர். தேவைக்கேற்ப பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • September 21, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.92 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.49 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.43 அமெரிக்க […]

இலங்கை

இலங்கையில் தீவிர பாதுகாப்புடன் நடத்தப்படும் தேர்தல் – குவிக்கப்பட்ட பொலிஸார்

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின் பாதுகாப்புக்காக விரிவான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகளை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக சுமார் 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். முக்கிய பாதுகாப்பு இடங்களில் பொலிஸாருக்கு மேலதிகமாக ஆயுதப்படை அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு தேவையான கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாகவும் […]

செய்தி

சிங்கப்பூரில் தமிழருக்கு கிடைத்த தண்டனை – குடிபோதையில் நடந்த விபரீதம்

  • September 21, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் பொது இடத்தில் திறந்த வெளியில் மலம் கழித்த இந்தியவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ராமு சின்னராசா என்பவர், கடந்தாண்டு ஒக்டோபர் மாதம். 30 ஆம் திகதியில் பிரபல வணிக வளாகத்தில் அதிகளவிலான மது அருந்திவிட்டு, இரவு முழுவதும் சூதாட்டத்தில் விளையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, போதையில் இருந்த ராமு, காலை 7 மணியளவில் வணிக வளாகத்திற்கு வெளியே திறந்த வெளியில் மலம் கழித்துள்ளார். பின்னர், அங்கிருந்த […]

விளையாட்டு

ஜனாதிபதி தேர்தல்! இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இன்று நடைபெறாது

  • September 21, 2024
  • 0 Comments

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியுசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 04 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களை எடுத்தது, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால் போட்டி நடத்தப்படாது, நாளையும் […]

செய்தி

லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தலைவர் மரணம்

  • September 21, 2024
  • 0 Comments

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பு அதன் மூத்த ராணுவத் தலைவர் இப்ராஹிம் அக்கில் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமுற்றனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 9 பேர் மோசமான நிலையில் உள்ளனர். இஸ்ரேலின் இலக்குகள் தெளிவானவை என்று பிரதமர் Benjamin Netanyahu ஊடகத்திடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் லெபனானைக் குறிவைத்து தாக்கிவருகிறது. இது மூன்றாவது […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்! தேர்தல்கள் ஆணையாளரின் கோரிக்கை

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும். இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு […]

error: Content is protected !!