இலங்கை

கம்பளையில் 20 இலட்சத்துக்கு லைட்டர் விற்ற இருவர் கைது!!

  • March 21, 2024
  • 0 Comments

ஒரேயொரு லைட்டரை 20 இலட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட் எனக்கூறியே, வென்னப்புவ வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடம் இவ்வாறு விற்பனைச் செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்க பிஸ்கட் படங்களை இணைத்தளங்களில் பெற்றுக்கொண்டு, கொள்வனவு செய்வோரிடம் அவற்றை காண்பித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அவ்வாறே, தங்க பிஸ்கட் வடிவத்தில், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட லைட்டரை விற்றுள்ளனர். கம்பளை, புஸ்ஸல்லாவை […]

ஐரோப்பா

ஜெர்மன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான செயல்!

  • March 21, 2024
  • 0 Comments

ஜேர்மன் பாராளுமன்றம் இன்று (21.03) அதன் முதலாவது செவி புலன் குறைப்பாடு உள்ள பாராளுமன்ற உறுப்பினரை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இதை  பாராளுமன்ற அவையில் இடம்பெற்ற வலாற்று நிகழ்வாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 44 வயதான Heike Heubach, என்ற குறித்த நபர் தற்போது Uli Grötsch க்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை மேலாளராகப் பின்னணியைக் கொண்ட ஹியூபாக், சக பணியாளர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். ஹியூபாக் முதலில் முன் வரிசையில் இடம்பிடித்தபோது, ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் மேடைக்கு அருகில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திருட வந்த இடத்தில் யோகா செய்த கொள்ளைக்காரி!!

  • March 21, 2024
  • 0 Comments

கொள்ளையடிக்க செல்லும் இடத்தில் திருடர்கள் தூங்கியதால் சிக்கிக் கொண்டது, சாமி கும்பிட்டுவிட்டு கைவரிசை காட்டுவது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம் இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார்.இதுதொடர்பான வீடியோக்கள் அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகி உள்ளது. ‘மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் புரொடோகால்’ ஒலிப்பதிவின் பின்னணி இசையுடன் கூடிய அந்த வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் […]

இலங்கை

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் : கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு!

  • March 21, 2024
  • 0 Comments

கொழும்பில் நேற்று (20.03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கராவே ஜினரதன தேரர் மற்றும் பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் 5 பேரையும் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

உலகம்

புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அவர்களின் பாதுகாப்பு படைகள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதை எளிதாக்குகிறது. பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் மற்றும் பாதுகாப்புச் செயலர் கிரான்ட் ஷாப்ஸ் ஆகியோர், அடிலெய்டில் உள்ள அவர்களது சகாக்களுடன் வெள்ளியன்று வருடாந்திர பேச்சுவார்த்தைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தனர். வியாழனன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஷாப்ஸ் கான்பெராவில் செய்தியாளர்களிடம் கூறினார். “ஒன்றாகச் […]

ஐரோப்பா

இத்தாலி பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்; 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடு கோரி வழக்கு

  • March 21, 2024
  • 0 Comments

நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக […]

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்

  • March 21, 2024
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார். தோனி அணியில் முக்கிய வீரராக செயற்பட உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 52 IPL போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த சில சீசன்களில், கெய்க்வாட் துடுப்பாட்டத்தில் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். தோனியின் விலகலுக்கு பிறகு அணியில் […]

வட அமெரிக்கா

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் ஒருவர் பலி!

  • March 21, 2024
  • 0 Comments

மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெப்ரியல் சாசெட் என்ற பெண்ணே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கெப்ரியல் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் கடைக்குச் சென்றிருந்த போது அவர்களது உடமைகளை தருமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.சில நபர்களினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டதனை கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை கௌரவிக்கும் நிகழ்வு!

  • March 21, 2024
  • 0 Comments

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு இலட்சம்  ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்துள்ளது. கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர்  ரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய  சண்முகம் குகதாசன் ஆகியோர் இணைந்து இந்த பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர். திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது […]

இந்தியா

கடத்தல் நாடகம்: ஆண் நண்பருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்ட மாணவி!

  • March 21, 2024
  • 0 Comments

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது ஆண் நண்பருடன் வெளிநாடு செல்வதற்காக தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய இளம்பெண்ணை பிடிக்க, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த காவ்யா (21) என்ற இளம்பெண்ணை, போட்டித் தேர்வுகளுக்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அவரது பெற்றோர் சேர்த்துவிட்டிருந்தனர். அங்கு 3 நாட்கள் மட்டுமே இருந்த காவ்யா, விடுதியில் இருந்து வெளியேறி இந்தூருக்கு சென்று தனது இரு ஆண் நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார். இந்த விவகாரம் தனது […]

error: Content is protected !!