ஐரோப்பா

இத்தாலி பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்; 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடு கோரி வழக்கு

நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Giorgia Meloni Deepfake Video: Italy PM Seeks Over 50 Lakhs In Damages Over Obscene Content - www.lokmattimes.com

இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2ம் திகதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content