உலகம்

திமோரில் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாள நிலநடுக்கம்..

  • February 27, 2024
  • 0 Comments

திமோர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • February 27, 2024
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று (27.02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அட்டவணையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.06 ரூபாவாகவும் விற்பனை விலை 315.72 ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் 2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண்…

  • February 27, 2024
  • 0 Comments

தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் பெண்ணொருவர், தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர் ஓய்வு பெற்று ராணுவ வீரர் ஆவர். இவருக்கும் இரண்டாவது மனைவி வெண்ணிலாவுக்கும் (28) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கணவன் – மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மகள்கள் […]

இலங்கை

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக இலங்கை முன்னெடுத்துள்ள புதிய திட்டம்!

  • February 27, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “காசா சிறுவர் நிதியம்” அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (26.02) கூடிய அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட […]

இலங்கை

இலங்கை தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

  • February 27, 2024
  • 0 Comments

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேசிய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம். ரத்நாயக்க. இது தொடர்பான தகவல்களை இன்றும் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்குப் பணம் செலவு செய்வது மட்டுப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு […]

இந்தியா

வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்ணிடம் 160 மில்லியன் ரூபாய் மோசடி – வெளியான அதிர்ச்சி தகவல்

  • February 27, 2024
  • 0 Comments

இந்தியாவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மேலாளர் தனது கணக்கில் இருந்து 160 மில்லியன் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்தியப் பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்வேதா ஷர்மா நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யப்படும் என நம்பி தனது அமெரிக்க கணக்கிலிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளார் ஆனால் ஒரு வங்கி அதிகாரி தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க “போலி கணக்குகளை உருவாக்கி, தனது கையெழுத்தை போலியாக உருவாக்கி, டெபிட் அட்டை மற்றும் காசோலை […]

பொழுதுபோக்கு

“மகாபாரதம் தொடங்கி 6000 ஆண்டுகளில் நடக்கும் கதை” கல்கி கதை இதுவா??

  • February 27, 2024
  • 0 Comments

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி என பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் கலந்த பேண்டஸி படமாக உருவாகிறது. சமீபத்தில் நாக் அஸ்வின் அளித்த ஒரு பேட்டியில், ‛‛இந்த படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 2898ம் ஆண்டில் முடிகிறது. அதனால் […]

செய்தி முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

விரைவில் போர் நிறுத்தம் – பைடன் அறிவிப்பு

  • February 27, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் புதிய போர் நிறுத்தம் நடப்பிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். நேற்று நியூயார்க் சென்றபோது அவர் அதனைச் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை எட்டும் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியிருப்பதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தம்மிடம் கூறியதாக பைடன் கூறினார்.

பொழுதுபோக்கு

‘கேப்டன் மார்வெல்’ நடிகர் கென்னத் மிட்செல் திடீர் மரணம்

  • February 27, 2024
  • 0 Comments

கனடா நாட்டை சேர்ந்தவர் கென்னத் மிட்சல். ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்தார். ‘தி ரெக்ரூட்’, ‘மிராக்கிள் ஹோம்’, ‘ஆப் தி ஜெயன்ட்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார். 2019ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் மார்வெல்’ படத்தில் இவர் ஏற்ற ஜோசப் டான்வெர்ஸ் கதாபாத்திரம், உலகளவில் ரசிகர்களை பெற்று தந்தது. 50க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பு மற்றும் மூளை நரம்பு செல்கள் சிதைவு நோயால் […]

கருத்து & பகுப்பாய்வு

மனதளவில் திடமாக இருப்பவர்களின் 6 ரகசியங்கள்!

  • February 27, 2024
  • 0 Comments

சில பேர் தன் வாழ்நாளில் எவ்வளவு அடிகளை வாங்கினாலும் விழாமல் திடமாகவே நிற்பார்கள். சில பேருக்கு அவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவர்கள் மட்டும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தன் வேலைகளைப் பார்க்கிறார்கள் என்று. உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் ஏதோ ஒரு பெரிய அடியிலிருந்துதான், விழாமல் திடமாக நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே இப்பதிவில் மனதளவில் திடமாக இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதைப் பார்ப்போம். 1. கடந்து சென்றுவிடுவார்கள்: இவர்கள் […]

error: Content is protected !!