இந்தியா

ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு! வருவாய்த்துறை ஊழியர் தேர்வில் முறைகேடுகள்?

ஏப்ரல் 26ஆம் திகதி மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வாணையம் நடத்திய வருவாய்த் துறை தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போபால், இந்தூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறைகேடுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில், ‘பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இருந்து மற்றொரு ஊழல் செய்தி வருகிறது. பாஜக அரசு ஏன் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் […]

இலங்கை பொழுதுபோக்கு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி!! இலங்கை வந்தாரா?

  • July 14, 2023
  • 0 Comments

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சென்னையில் இருந்து மாலைதீவின் தலைநகர் மாலே வரை பயணம் செய்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தனது உத்தியோகப்பூர்வ கேஸ்புக் தளத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. மேலும், எங்களுடன் பறந்ததற்கு நன்றி மற்றும் நீங்கள் விமானத்தில் இருப்பது ஒரு மரியாதை என்றும் பதிவிடப்பட்டுள்ளது    

இலங்கை

கல்முனை கடற்கரை பகுதிகளில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணி

  • July 14, 2023
  • 0 Comments

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது.இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் இராணுவ முகாம் சூழல் அமைந்துள்ள கடற்கரை மற்றும் அண்டிய பல பகுதிகள் சிரமதான பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்தனர். இதன்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு […]

வட அமெரிக்கா

தூங்கவிடாமல் தொந்தரவு செய்த்தால் குழந்தைக்கு விஷப் பால் கொடுத்த தாய்!

  • July 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.கடந்த மாதம் 26ம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குழந்தை அருந்திய பாலுடன் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிகளவு கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி […]

இலங்கை

யாழில் நிறுவப்பட்ட வெளிநாடு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம்

  • July 14, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான காணியை பெற்றுத்தருமாறு தான் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். மேலும் ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

இலங்கை

இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிலையங்கள்! ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த முயற்சியில் தற்போது பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைப்பது அடங்கும் […]

இலங்கை

காணாமல் போன சுற்றுலாப் பயணி! வெளியான அதிர்ச்சி தகவல்

பொத்தபிட்டியவில் காணாமல் போன டேனிஷ் சுற்றுலாப் பயணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது மலையேற்றத்தின் போது காணாமல் போன  டேனிஷ் சுற்றுலாப் பயணியின் (32) சடலம் பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் கண்டி அலகல்ல மலைத்தொடரில் இருந்து இலங்கை இராணுவ சிங்கப் படைப்பிரிவின் (11வது பிரிவு) படையினரால் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பெண் சுற்றுலாப் பயணியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் இது தொடர்பில் போலீசார் […]

பொழுதுபோக்கு

திமுக-வின் ஆதரவோடு தான் வைரமுத்து பெண்களை மிரட்டுகிறார்!! பிரபல பாடகி பகீர் தகவல்

  • July 14, 2023
  • 0 Comments

சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு அப்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் பாடகி சின்மயிக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு பெரிய பிரச்சனையே வந்துவிட்டது. அப்போதில் இருந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகிறார் சின்மயி. வைரமுத்துவை பற்றி யார் புகழ்ந்தோ சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டாலோ அவர்களிடம் பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருவார். அப்படி சமீபத்தில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளுக்கு தமிழ் நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி டிவிட்டரில் […]

இந்தியா

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. எல்விஎம்3எம்-4 ராக்கெட்டில் சந்திரயான்-3 ஏவப்படுவதற்கான 25½ மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது. கவுண்ட்டவுனை முடித்து, சந்திரயான் 3 இன்று மதியம் 2:35:17 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளம் 2 இல் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ‘சந்திராயன் 3’ல் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ஜின் 3 முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. ராக்கெட்டின் […]

இலங்கை வட அமெரிக்கா

அமெரிக்காவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த கதி !

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 34 வயதான ஹசித் நவரத்ன, ஜூலை 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். ஹசித் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!