வட அயர்லாந்துக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தம்!
வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வட அயர்லாந்தின் டிரான்ஸ்லிங்க் (Translink ) நிறுவனம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பெல்ஃபாஸ்டிலிருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, Ulsterbus அல்லது கிளைடர் (Glider) சேவைகள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில் நிலையத்தில் (Grand Central Station) இருந்து இயக்கப்படும்கடைசி ரயில் சேவைகள் இரவு 8.15 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதேவேளை பெல்ஃபாஸ்டுக்கு வெளியே, உள்ளூர் பேருந்து சேவைகள் சில மாற்றங்களுடன் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் Goldliner சேவைகள் இரவு 7.30 மணிக்கு மேல் புறப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




