உலகம்

மத்தியக் கிழக்கு பதற்றம் – எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்த வெனிசுலா!

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் வேகமெடுத்ததால், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது.

வெனிசுலாவின்  அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான (PDVSA) வழங்கிய கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் ஆவணங்களின்படி, மார்ச் மாத அளவோடு ஒப்பிடுகையில் அவர்களின் எரிபொருள் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற 61 கப்பல்கள் வெனிசுலாவிலிருந்து புறப்பட்டன, இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 66 கப்பல்களாக அதிகரித்துள்ளது.

ஜனவரியில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இதன் விளைவாக, வெனிசுலா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டு, எண்ணெய் வளங்களும் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெனிசுலாவின் எரிபொருள் ஏற்றுமதி தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹார்மோஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றமான நிலைமை நாடுகள் மாற்று வழியை தேட ஆரம்பித்துள்ளன. இதனால் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!