செய்தி வட அமெரிக்கா

பெல்சின்வேனியா சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – இருவர் பலி,9 பேர் மாயம்

அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில்  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மாயமாகினர்.

மாயமான 9 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் மாயமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி