இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – காதலனின் நண்பனால் சிறுமிக்கு நேர்ந்த கதி

மொனராகலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் அவருடைய காதலனின் நண்பனால் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

17 வயதான சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார்.

அன்று, அவசர வேலை நிமித்தம் வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார்.

அவர் வெளியே சென்றுள்ளார் என சிறுமி கூற,  புகைப்பொருளை பற்றவைப்பதற்காக நெருப்பை கேட்டுள்ளார்.

அந்த சிறுமியும்  தீப்பெட்டியை எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற​போது, பின்னாலே சென்ற அந்தநபர், அச்சிறுமியின் வாயை பொத்தி, வீட்டுக்குள்ளேயே தள்ளிக்கொண்டுச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்தவற்றை அச்சிறுமி தன்னுடைய மாமியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!