உலகம் செய்தி

ஈரானின் யூரேனியம் செறிவூட்டலுக்கு ரஷ்யா ஆதரவு!

  • April 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் Sergey Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற சர்வதேச அணுசக்தி முகமையின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான எந்தவொரு சுமுகமான தீர்வையும் ரஷ்யா […]

இலங்கை செய்தி

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு!

  • April 15, 2026
  • 0 Comments

தற்போதைய நிலைமைகளில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (15) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

உலகம் செய்தி

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு பயணம்!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஏபர்ல் 15 முதல் 18 வரையில் 4 நாள் பயணமாகவே அவர் மேற்படி நாடுகளுக்கு செல்கின்றார். துருக்கியில் நடைபெறும் அந்தல்யா இராஜதந்திர மன்ற நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார். ஏனைய நாடுகளிலும் விசேட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான […]

இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் அநுர!

  • April 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போது மகாநாயக்க தேரர், செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதன்பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய […]

உலகம் செய்தி

சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் ட்ரம்பின் வியூகத்தை முறியடித்தது ரஷ்யா!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையால் சீனாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் ரஷ்யா உதவும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது. உலகளாவிய அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மாற்று […]

உலகம் செய்தி

இத்தாலி பிரதமர் கோழை: ட்ரம்ப் காட்டம்

  • April 15, 2026
  • 0 Comments

இத்தாலி பிரதமர் Giorgia Meloni தைரியமற்றவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இத்தாலி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது. அதேபோல திருத்தந்தை தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு இத்தாலி பிரதமர் கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கினால் அது இத்தாலிக்கே ஆபத்தாக முடியும் என்பதை Giorgia Meloni உணரவில்லை என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் செய்தி

ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி J.D. Vance தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வெறும் சிறிய அளவிலான உடன்படிக்கைகளைச் செய்யாமல், மிக முக்கியமான மற்றும் விரிவான மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தையே டிரம்ப் இலக்காகக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துணை ஜனாதிபதி J.D. […]

இலங்கை செய்தி

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

  • April 15, 2026
  • 0 Comments

புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது. மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன் சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து சம்பிரதாய முறைப்படி […]

இந்தியா

பாய்லர் வெடித்ததில் 10 பேர் பலி: 40 பேர் காயம்! சத்தீஸ்கரில் சோகம்!!

  • April 15, 2026
  • 0 Comments

இந்தியா, சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 40 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த […]

இலங்கை செய்தி

சுயாட்சி நோக்கியே எமது அரசியல் பயணம்: சுமந்திரன் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு […]

error: Content is protected !!