இலங்கை செய்தி

தப்பிச்சென்ற வேன்மீது யாழில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் உயிரிழப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

யாழில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற வேன்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைவேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிறுத்தாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்து விட்டு அல்லைப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அந்த வாகனம், […]

பொழுதுபோக்கு

20 ஆம் திகதி திரைக்கு வருகிறது “ஜனநாயகன்”?

  • February 10, 2026
  • 0 Comments

“ஜனநாயகன்” படம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதென தெரியவருகின்றது. இதற்குரிய ஏற்பாடுகளை பட தயாரிப்பு நிறுவனம் செய்துவருகின்றது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு தணிக்கை […]

விளையாட்டு

பாகிஸ்தான்,அமெரிக்கா இன்று பலப்பரீட்சை!

  • February 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா Namibia மற்றும் நெதர்லாந்து Netherland அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு ஆரம்பமாகின்றது. 11 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து New Zealand , ஐக்கிய அரசு அமீரக United Arab Emirates அணிகள் களம் காண்கின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 PM மணிக்கு இப்போட்டி […]

உலகம்

சிட்னி கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொலிஸார்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொதிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog இன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பொலிஸாரை தாக்க முற்பட்டனர் என இவர்களில் 10 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னியில் சுமார் 6 ஆயிரம்பேர்வரை நேற்றிரவு திரண்டிருந்தனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்ப்புக் கூட்டத்தில் உரைகள் முடிவடைந்த பின்னர், போராட்டக்காரர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். […]

விளையாட்டு

1996 இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செய்த செயலை சுட்டிக்காட்டி அநுர நன்றி தெரிவிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.சி.சி. முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார். 1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் […]

விளையாட்டு

பாகிஸ்தான் ‘பல்டி’ – இந்தியாவுடன் மோத முடிவு!

  • February 10, 2026
  • 0 Comments

T -20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் தொடர்பில் தான் எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் Pakistan மாற்றியுள்ளது. இதற்கமைய இந்தியாவுடன் இலங்கை ஆடுகளத்தில் விளையாட அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளது. T – 20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டி புறக்கணிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது. எனினும், இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைPakistan Cricket Board , ICC க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.இருந்தது. போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என […]

இலங்கை செய்தி

மிகப்பெரிய பொருளாதார திட்ட முன்மொழிவுகளை தயாரிக்குமாறு பணிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் Chemmani mass grave தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை […]

விளையாட்டு

மண்கவ்வியது ஓமான்: வெற்றிக் கனியை ருசித்தது சிம்பாப்வே!

  • February 9, 2026
  • 0 Comments

சிம்பாப்வே Zimbabwe மற்றும் ஓமான் Oman அணிகளுக்கிடையிலான T20 ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழச்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஓமான அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. ஓமான் அணியில் மூவர் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. பின்னர் வெற்றி […]

இலங்கை செய்தி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்று (09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு […]

error: Content is protected !!