கச்சதீவு திருவிழாவில் 3,996 தமிழக யாத்திரிகள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நாளைமறுதினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர். இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 விசைப்படகுகளில் 3 […]













