ஐரோப்பா

உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ரஷ்ய அதிபர் புடின்

ஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய செர்ஜி லாவ்ரோவ், “பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிற்கு தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அவ்வகையில் இந்த முறை அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி கடந்தாண்டு ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

உக்ரைன் – ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக புதின் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதின் எப்போது இந்தியா வரவுள்ளார் என்ற தகவல் இன்னும் வரவில்லை

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்