ஐரோப்பா

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா : உக்ரேன் ராணுவம்

உக்ரேனின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ரஷ்யா இரவு முழுதும் சில ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சியுள்ளதாக கியவின் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த ஆயுதங்களில் பலவற்றை ஆகாயத் தற்காப்பு முறைகள் அழித்துள்ளதாக அது கூறியது.அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை.

ரஷ்யத் தாக்குதல்களில் 4 வயது குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்ததாக கிழக்கில் உள்ள கார்கீவ் வட்டாரத்தின் ஆளுநர் ஒலேஹ் சினிஹுபோவ், டெலிகிராம் செயலியில் பதிவிட்டார்.

கார்கீவ் நகரில் எரிவாயுக் குழாய் ஒன்று சேதமுற்றது என்றும் குறைந்தது இரண்டு வீடுகள் அழிந்துபோயின என்றும் அதன் மேயர் இஹோர் தெரகோவ் கூறினார். அதோடு, பத்து வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர் சொன்னார்.

அந்த விவரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. ரஷ்யாவிடமிருந்தும் எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்