ஆசியா

சிங்கப்பூரில் தலைமுடியை வைத்து புதிய கண்டுபிடிப்புக்கு தயாராகும் அதிகாரிகள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொண்டவர்களை உடனே கண்டறிய தலைமுடிப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமுடி என்பதால் கண்டுபிடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். அத்துடன் சிறுநீரைக் கொண்டு பரிசோதிப்பதைக் காட்டிலும் இது ஆரோக்கியமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று பரிசோதனை அதிகாரிகள் கருதுகின்றனர்.

புதிய பரிசோதனையின் மூலம் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வருடாந்திரப் பணித்திட்டக் கருத்தரங்கில் கருவி பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இளையர்களிடையே அதிகரித்துவரும் போதைப்புழக்கத்தைக் குறைக்கச் சமூக அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.

இவ்வாண்டு பெற்றோருக்கென ஒரு மாநாடு நடத்தப்படும். அதில் போதைப்பொருள்களின் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுக்கு எப்படி எடுத்துச்சொல்வது என்பதன் தொடர்பில் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்