செய்தி விளையாட்டு

IPL Match 04 – லக்னோவை வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.

இறுதியில் லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 210 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் மெக்கர்க் 1 ரன்களும், சமீர் ரிஸ்வி 4 ரன்களும், அக்சர் படேல் 22 ரன்களும், டு பிளெசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களில் வெறியேறினார். அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

இறுதியில் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி