ஆசியா

சட்டவிரோத இணைய மோசடி ; தாய்லாந்து எல்லையில் 270 வெளிநாட்டினரை கைது செய்த மியான்மர்

தாய்லாந்தை ஒட்டிய மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடிச் சம்பவங்கள் நடைபெறுவதாகச் சந்தேகிக்கப்படும் நிலையங்களிலிருந்து 273 வெளிநாட்டவர்களை மியன்மார் அதிகாரிகள் பிப்ரவரி 17ஆம் திகதி தடுத்துவைத்தனர்.

தாய்லாந்துக்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத இணைய மோசடிகளை ஓடுக்கும் நடவடிக்கைகளை மூத்த சீன அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

மோசடி கும்பல்களால் கடத்தப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதி உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மோசடி நிலையங்களில் வேலைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

பல ஆண்டுகளாக இந்த மோசடி நிலையங்கள் செயல்பட்டு வந்தாலும், தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட சீன நடிகர் வாங் ஜிங் மீட்கப்பட்டு, சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பிறகே இவற்றின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

சீனா, மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இவ்வாரம் மியாவாடியில் சந்தித்தனர். இச்சந்திப்பில் சீனாவின் துணை பொது பாதுகாப்பு அமைச்சர் லியு ஜோங்கியும் பங்கேற்றார் என மியன்மார் அரசின் ‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ நாளிதழ் பிப்ரவரி 18ஆம் திகதி கூறியது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்