சந்திரன் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு! பல மர்மங்களுக்கு விடை
சந்திரனின் மேற்பரப்பில் ஒக்ஸிஜன் உள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான தாதுக்களைச் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒக்ஸிஜனேற்றம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் இரும்பு ஒக்ஸைடு தாதுக்களைக் கண்டுபிடித்தமையானது, சந்திரன் குறித்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விடயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சாங்’இ-6 (Chang’e-6) விண்கலம் மூலம் சேகரிக்கப்பட்ட, 3,000 மில்லிகிராம் எடை கொண்ட சந்திர மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்திர மாதிரிகளை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலம் பகுப்பாய்வு செய்தபோது, அவற்றில் ஹெமடைட் (Hematite), […]













