ஐரோப்பா

விளாடிமிர் புட்டினுடன் கைக்கோர்க்கும் வடகொரிய தலைவர் : மேற்குலக நாடுகளுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்!

  • June 12, 2023
  • 0 Comments

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு “முழு ஆதரவையும் தெரிவித்துள்ளா். அத்துடன் ரஷ்யாவுடன் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்  அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “நீதி நிச்சயம் வெல்லும், ரஷ்ய மக்கள் வெற்றியின் வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்” என கிம் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் உறுதியாகக் கைகோர்க்க […]

இந்தியா வட அமெரிக்கா

நாடு கடத்தப்படவுள்ள மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் வெளியான தகவல்

  • June 12, 2023
  • 0 Comments

கனடாவிலிருந்து 700 இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில், சில மாணவர்களின் நாடுகடத்துதலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைப்பு : விசாரணைகளை ஆரம்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

  • June 12, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைப்பு குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில், இந்த தகவலை வெளிப்படுத்தினார். “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் சமீபத்திய நாட்களில் Kherson பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்,” என்று ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பொது வழக்கறிஞர் அலுவலகம் இந்த பேரழிவு பற்றிய விசாரணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தொடர்புடைய கோரிக்கையை அனுப்பியது என்றும் இதற்கான  பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடழ்டுள்ளார். ” சுமார் […]

ஐரோப்பா

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிரித்தானியர்கள் பலி!

  • June 12, 2023
  • 0 Comments

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரிட்டிஷ் பயணிகள் மூவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் தீப்பிடித்த டைவிங் படகில் இருந்த காணாமல் போயிருந்த மூன்று பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Scuba Travel இன் செய்தித் தொடர்பாளர் “டூர் ஆபரேட்டராக, எங்கள் மிகவும் மதிப்புமிக்க மூன்று  பயணிகள் தீவிபத்தில் உயிரிழந்ததை கனத்த இதயத்துடன்,  தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த சோகமான நேரத்தில் எங்கள் உண்மையான மற்றும் இதயப்பூர்வமான இரங்கல்கள் அவர்களின் […]

இலங்கை

பழைய உணவை கொடுத்து பகிடிவதை; 11 மாணவர்கள் இடைநிறுத்தம்

  • June 12, 2023
  • 0 Comments

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், பழுதடைந்த சோற்றை கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று பழுதடைந்த சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகிடிவதைக்கு உள்ளாக்கிய மாணவர்களுக்கான வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு , முறையான விசாரணை […]

பொழுதுபோக்கு

அனுமனுக்கு பக்கத்து சீட் வேணுமா? முதல்ல இந்த செய்திய படிங்க…

  • June 12, 2023
  • 0 Comments

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். அதேபோல் படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான ராவணன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார். ஆதிபுருஷ் திரைப்படம் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற ஜூன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இன்று மதியம் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

  • June 12, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இன்று (12) மதியம் 12 மணி முதல், இரவு 09 மணி வரை ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் மேலும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்து, சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வு காரணமாக, இராணுவ வீரர்கள் உணவு வங்கிகளை நாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய இராணுவ வீரர்கள் சிலர், தங்கள் உணவகத்தில் சலுகை விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிலரோ, போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால், வீட்டுக்குச் சென்று தங்கள் அன்பிற்குரியவர்களைக் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால், Lincolnshire இராணுவ விமான தளத்திலேயே ஒரு உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாம்.பெண் விமானி ஒருவர், தான் வைத்திருந்த பணத்தை தன் […]

இலங்கை

60 மருந்துகளுக்கு மாத்திரம் தான் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • June 12, 2023
  • 0 Comments

நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 1000 அத்தியாவசிய மருந்துகள் உள்ள நிலையில்,  அவற்றில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலை கட்டுப்பாடு உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த காலங்களில் மருந்துகளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவா் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தற்போது டொலரின் பெறுமதி குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்துள்ளதால் அதன் பலன் நிச்சயமாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதனை வழங்குவதற்கு […]

உலகம்

ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் பதிவு!

  • June 12, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம் ஏற்படுவது அரிது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, கடைசியாக 2014 இல் 5.0 அளவு […]

error: Content is protected !!