உகண்டாவில் பாடசாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40பேர் பலி
உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் IS பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. […]













