வாழ்வியல்

அதிக தண்ணீர் குடித்தால் ஆபத்தா.?

தண்ணீர் உடலுக்கு எவ்வளவு தேவை என்றால் தண்ணீர் இல்லாமல் உடம்பில் ஒரு அணுவும் அசையாது. ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? என்ற கேள்வி மிக சுலபமானது. இதற்கான பதில் ஒற்றை வரியில் சொல்ல முடியாது.

உடலின் தண்ணீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரின் உடல் எடை, உடல் ஆரோக்கியம், அவர்கள் வாழும் சூழ்நிலை, அவரின் சுற்றுசூழல் போன்றவற்றைக் கொண்டு முடிவுச் செய்யும் விடயமாகும்.

What happens if you drink too much water? - Global Village Space

நம் உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் நமக்கு ஒரு சமிக்ஞை உணர்வு ஏற்படுத்தும் அது தான் நமக்கு ஏற்படும் ‘தாகம்’. தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடித்தாலே நலம். அதைவிடுத்து ஒரு அளவு வைத்து குடிப்பதெல்லாம் தேவையில்லை.

நாம் தண்ணீரினை அதிக அளவில் குடிக்கும்போது அந்தத் தண்ணீரே விஷமாக மாற வாய்ப்பிருக்கிறது.

Strange but True: Drinking Too Much Water Can Kill - Scientific American

தண்ணீரை அதிகமாக குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நீரை விட அதிகமான நீரானது உடம்பில் சேரும்போது நமது சிறுநீரகங்களுக்கு அவற்றை எவ்வாறு வெளியேற்றுவது என்று தெரியாமல் அந்த அதிகப்படியான நீர், நம் அணுக்களின் உள்ளே புகுந்து அணுக்களை வீங்க வைக்கிறது.

இது மூளையில் உள்ள செல்களில் நடக்கும் பொழுது உயிருக்கே ஆபத்தாகவும், கோமா கூட ஏற்பட காரணமாக அமைகிறது. நம் உடலில் நீரின் அளவு அதிகமாக இருக்கும் போது நம் கை கால்கள் மற்றும் உதடுகளில் வீக்கம் மற்றும் நிற மாற்றம் காணப்படும்.

Drinking Too Much Water? Know 5 Side Effects Of Overhydration - NDTV Food

நம் உடலில் இருக்கின்ற சோடியம் ஆனது செல்களுக்கு சிக்னலிங் மற்றும் உடலில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது குறைவதால் ஹைபோநெட்ரீமியா உருவாகிறது. இதனால் வாந்தி, குமட்டல் போன்றவைகள் ஏற்படுகின்றன.

அதிகப்படியான நீர் குடிப்பதன் காரணமாக நம் உடலின் உப்பின் அளவு குறைகிறது. இதன் காரணமாக உடலின் நீர் சமநிலை பாதிப்படைகிறது. மூளையில் இருக்கின்ற செல்கள், தலைப் பகுதியில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி தலைவலி ஏற்படும்.

7 Perfect Signs That Prove You Are Drinking Too Much Water

அதிகமாக நீர் குடிப்பதால் எலக்ட்ரோலைட் குறைவதால் தசைகள் தளர்வடைகிறது. இதனால் தசைப்பிடிப்பு, தசை வலி ஏற்படுகிறது.

அதிகப்படியான தண்ணீர் அருந்துவதால், சீறுநீரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதால் எப்போதும் சோர்வாக உணருவது போன்று தோன்றும்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content