இலங்கை செய்தி

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்

  • April 11, 2023
  • 0 Comments

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03ம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளின் தமிழர்கள் புறக்கணிப்பு : கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் அதிருப்தி!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில், இலங்கை நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது. இந்நிலையில், கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இந்த உதவி செயற்திட்ட […]

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடுகிறோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

  • April 11, 2023
  • 0 Comments

இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளுடன் மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாகத் தலையிடப்போவதாகத் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த 21ஆம் திகதி கூடியபோதே அதன் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் குழுவானது துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் மிகவும் முக்கியமான பணியாற்றும் குழு எனச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர், இதில் அடங்கும் பல்வேறு துறைகள் குறித்து எதிர்வரும் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃப்பின் உதவியை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறு வர்த்தக பேரவை வலியுறுத்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறும், மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அவசியமான ஆதரவை வழங்குமாறும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது. அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு அப்பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் குறித்த பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் இடைநிறுத்தப்படும்பட்சத்தில் அதனை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாது […]

இலங்கை செய்தி

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் Crafting Ceylon வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட Crafting Ceylon ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய […]

இலங்கை செய்தி

சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பில் வங்கித் துறையுடன் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் அவற்றில் காணப்படும் நிதிச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக வங்கித்துறையுடன் கலந்துரையாடியது. இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் […]

இலங்கை செய்தி

யாழ் நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதுடன்இ அவர்கள் அழைத்து வரப்பட்டதும் மேலதிக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

எலி மொய்த்த உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற  மனித பாவனைக்கு  பொருத்தமற்ற எலி  மொய்த்த  உணவுகள்  களஞ்சியப் படுத்தியும், விற்பனைக்காகவும் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த  உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியும் நீதிமன்றத்திடம் […]

இலங்கை செய்தி

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

  • April 11, 2023
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்! நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் […]

இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

  • April 11, 2023
  • 0 Comments

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் […]

error: Content is protected !!