இலங்கை செய்தி

விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அங்கு செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினருக்கு மாத்திரமே அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலமாக முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை பாதுகாக்க விசேட கூட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்றுவிசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த […]

இலங்கை செய்தி

திருகோணமலை சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை மின்சாரசபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனியால் திருகோணமலை சம்பூரில் அமைந்துள்ள சூரிய மின்னுற்பத்தி நிலையத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த  இடத்திலேயே 135 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை 2 படிமுறைகளாக ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனிக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் 1 […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – சுனில் ஹந்துனெத்தி

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்க்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் அவர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் […]

இலங்கை செய்தி

மீண்டும் குறையும் பால்மாவின் விலை!

  • April 12, 2023
  • 0 Comments

அண்மையில் பால்மாவிற்கான விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு  தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்   கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும்  கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL -226 இல் துபாயிலிருந்து   கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான தமது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள பீடத்தில் ஷ வழங்கியுள்ளனர். இதன்போது அவர்களின் கடவுச்சீட்டில் […]

இலங்கை செய்தி

கச்சைத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் : யாழ் செயலருக்கு கடிதம்!

  • April 12, 2023
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணமே கோரிக்கை அடங்கிய கடிதத்தை யாழ்ப்பாண செயலருக்கு அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில்  புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரச மரங்கள் நாட்டப்ட்டுள்ளதாகவும் நம்பகரமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன. இதுபற்றி ஆராய்ந்து முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்திய […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அறிவிக்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார் இன்று இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் விலை 325 […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் வரிசை மீண்டும் ஆரம்பம்?

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!