ஜனாதிபதி தேர்வுக்கு பயன்படுத்திய வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு
ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்வதற்காக 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று (04) அறிவித்தார். 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 18 ஆம் வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023.03.24ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களால் […]













