இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – காதலனின் நண்பனால் சிறுமிக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

மொனராகலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் அவருடைய காதலனின் நண்பனால் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 17 வயதான சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார். அன்று, அவசர வேலை நிமித்தம் வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார் என சிறுமி கூற,  புகைப்பொருளை […]

இலங்கை செய்தி

இலங்கையில் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் அரசியல்வாதிகள்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டத்தை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும் என உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசு, ‘இப்போது அரசு வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும் விற்பனை செய்ய […]

இலங்கை செய்தி

இலங்கை இளைஞர்களுக்கு வெளிநாடு ஒன்றில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக தெரியவந்துள்ளது. பிரதி சாபாநயகர் அஜித் ராஜபக்ஷவைச் சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை இளைஞர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், அது தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை ஆராய்வதற்காக இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஹூண்டாய் கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் பியோன்ங் போ (Kim Byong Boo) உள்ளிட்ட குழுவினர், […]

இலங்கை செய்தி

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

4 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதுடைய பெண்ணின் கை மன்னாவால்  கொண்டு தாக்கப்பட்டது. அந்த தாக்குதலில் யுவதியின் இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையின் பாகம் ஐஸ் பையில் வைக்கப்பட்ட நிலையில் சிறுமி உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக செயற்பட்ட கேகாலை […]

கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

புத்தளம் – கற்பிட்டி,  சிலாபம், நீர்கொழும்பு   ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை இன்று  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன்  நியாயமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுயளித்தார். கற்பிட்டி, கந்தக்குளி சென். அந்தனி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதே கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து, நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற கற்பிட்டி, கந்தக்குளி முகத்துவார பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் முகத்துவாரப் பகுதியை தூர்வாருவதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை […]

இலங்கை செய்தி

உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு

  • April 12, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழு  நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் கூடியது. இந்த குழுவை ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், (அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் நிறுவப்பட்டது. உள்ளூராட்சி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் […]

இலங்கை செய்தி

நட்டத்தில் இயங்கும் 13 நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை!

  • April 12, 2023
  • 0 Comments

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி திறைசேரியால் பாதுகாக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும்இ 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார். நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 பில்லியன் ரூபா எனவும்இ […]

இலங்கை செய்தி

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிகம் சம்பளம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய வேலைகளுக்கான இலங்கை இளைஞர்களைத் தெரிவு செய்வது தொடர்பான நேர்முகத் தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் பியோங் போ உள்ளிட்ட குழுவினர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை நேற்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும் மேலும் பயிற்சி […]

இலங்கை செய்தி

இந்த வருடத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின்பொருளாதாரம் 2023 இல் வீழ்ச்சியடைந்த பின்னரே மீண்டும் 2024 இல் வளர்ச்சி பாதையைநோக்கி செல்லும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 2022 இல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் 3 சதவீத்தினால்  வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. இலங்கை மீட்சிக்காக நீண்டபாதையில் பயணிக்கவேண்டும் வறியவர்களும் நலிந்தவர்களும் பாதுகாக்கப்படுவது அவசியம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

வருமான வரி மூலம் 25 பில்லியன் ரூபாய்களை ஈட்டிய அரசு!

  • April 12, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பண வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 3106 மில்லியனும்,  பெப்ரவரியில் 10,540 மில்லியனும்,  மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!