பொழுதுபோக்கு

நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது… செல்வராகவன் டுவிட்

  • July 4, 2023
  • 0 Comments

மாமன்னன் படத்தில் வரும் நெஞ்சமே நெஞ்சமே பாடலைக் கேட்டு மயங்கி இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை வெகுவாக புகழ்ந்துள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்,ரவீனா,லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் வெளியாகும் முன்பே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மாரி செல்வராஜின் முந்தைய […]

இந்தியா

படுத்திருந்த மெத்தை வெடித்ததால் நபர் ஒருவர் பலி!

  • July 4, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் ஸ்மிட் நகரில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்து பார்த்தபோது நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட […]

இலங்கை

வவுனியா நகரசபையில் இன்று புதிய செயலாளர் நியமனம்.

  • July 4, 2023
  • 0 Comments

வவுனியா நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய இ.தயாபரன் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து தற்காலிக செயலாளர் மூலம் இயங்கி வந்தது. வெற்றிடமாக காணப்பட்ட இப் பதவிக்கு புதிதாக செயலாளர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி வந்த பூ.செந்தில்நாதன் வவுனியா நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் (04) உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட அமெரிக்கா

தன் 99வது பிறந்த நாளை ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய மூதாட்டி!

  • July 4, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 99 வயதான மூதாட்டி ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நோக்கில் விமானத்திலிருந்து குதித்துள்ளார். பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபடும் விருப்பத்தை கொண்ட லக்கி கோயிங் வயோதிபப் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார் .அந்த வகையில் தனது 99வது பிறந்த நாளை முன்னிட்டு பூமியிலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இந்த அனுபவம் அலாதியானது எனவும் இது […]

வட அமெரிக்கா

சான்-பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு; அமெரிக்கா கடும் கண்டனம்

  • July 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் திகதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு படையினர் […]

இலங்கை

யாழ் புத்ர் தாக்குதல் சம்பவம் ; 24 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

  • July 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக […]

புகைப்பட தொகுப்பு

மன்னாருக்குள் எந்த ஒரு மதுபான சாலைகளும் வேண்டாம்

  • July 4, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை(04) மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பிரஜைகள் குழு,மகளீர் அமைப்புக்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை இடம் பெற்றது. மன்னாரில் கத்தோலிக்க இந்து ஆலயங்கள்,பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு […]

இலங்கை

இலங்கையில் சடுதியாக குறைந்த லிட்ரோ சமையல் எரிவாயு விலை!

  • July 4, 2023
  • 0 Comments

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. விலைத்திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதேநேரம், 5 […]

பொழுதுபோக்கு

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன….

  • July 4, 2023
  • 0 Comments

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா, நீச்சல் உடை அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தார் அர்ஜுன். பட்டத்து யானை மற்றும் சொல்லிவிடவா ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. 2 படங்களுமே கைகொடுக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதேபோல் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் தீயை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு படை வீரருக்கு நேர்ந்த கதி!

  • July 4, 2023
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிசைச் சேர்ந்த இளம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 24 வயதுடைய ஒரு வீரரே திங்கட்கிழமை காலை பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை Saint-Denis நகரின் rue Landy வீதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த அதிகாரி உட்பட நான்கு தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்க முற்பட்டபோது குறித்த 24 வயதுடைய அதிகாரி தீக்குள் சிக்கி காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]

error: Content is protected !!