நால்வரின் உயிரை பறித்த TikTok சவால்! அதிர்ச்சியில் பயனாளர்கள்
உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள TikTok தளத்தில் தற்போது பிரபலமாகப் பின்பற்றப்படும் சவாலில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பது அந்தச் சவாலாகும். கடந்த 6 மாதங்களில் அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனல். அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறினார். இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் தமது மனைவியும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்தார். அதன் […]













