ஐரோப்பா

பிரான்ஸில் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்ட மில்லியன் யூரோ பணம்

  • May 1, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றும் அத்தொகை உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. EuroMillions விளையாட்டில் வெற்றி பெற்ற தொகையே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் தொகையை வெற்றி பெற்றிருந்தார். ஆனால் குறித்த நபர் அத்தொகையினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. நேற்று ஏப்ரல் 29 ஆம் திகதி நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அத்தொகையினை எவரும் உரிமை […]

செய்தி தமிழ்நாடு

சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள் பாலித்தார்

  • May 1, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் சாமிக்கு தினமும் காலை மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று, விஷேச மலர் அலங்காரத்தில் சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அங்கு, சாமிக்கு பல்வேறு பூஜைகள் ஆராதனையில் நடைபெற்றது. பின்னர், உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக சுந்தர வரதராஜ பெருமாள் ஊர்வலம் வந்து காட்சியளித்தார். […]

ஆசியா

சிங்கப்பூர் மக்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள் – கூகுள் வெளியிட்டுள்ள பட்டியல்

  • May 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவின் டென்பசார் (Denpasar), பாலி தீவுகள் முதலிடத்தில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. முறையே ஜப்பான் நாட்டின் டோக்கியோ இரண்டாவது இடத்திலும், தாய்லாந்து நாட்டின் பாங்காக் மூன்றாவது இடத்திலும், லண்டன் நான்காவது இடத்திலும், தென் கொரியாவின் சியோல் (Seoul) ஐந்தாவது இடத்திலும் தைவான் நாட்டின் தைப்பே ஆறாவது இடத்திலும், ஜப்பான் நாட்டின் ஒசாக்கா (Osaka) ஏழாவது இடத்திலும், ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் பலி

  • May 1, 2023
  • 0 Comments

ஹொரவ்பொதான – வவுனியா ஏ29 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொதான– வவுனியா வீதியின் கிவுலகடவல பகுதியில் கார் ஒன்று இரண்டு மாடுகளை மோதி பின்னர் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காரில் பயணித்த 22 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 வயதுடைய இளைஞன் பலத்த காயமடைந்து ஹொரவ்பொதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp செயலிக்கு கூடுதல் பாதுகாப்பு – தவறாக அழுத்தினால் அழிந்து விடும்

  • May 1, 2023
  • 0 Comments

WhatsApp செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக பயோமெட்ரிக் சென்சார் வசதியை நிறுவனம் கொண்டு வரவுள்ளது. உலக அளவில் பல கோடி ஸ்மார்ட் போன் பயனாளிகளால் உபயோகப்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமானது WhatsApp செயலி. முதலில் வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக வந்து, புகைப்படம், வீடியோ, மற்ற ஃபைல்ஸ் என பகிர ஆரம்பித்து, ஆடியோ கால், வீடியோ என கால் என நீண்டு தற்போது பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டது. பணம் அனுப்பும் வசதி வரை […]

வாழ்வியல்

கருமையான உதட்டை சமாளிக்க வழிகள் – வீட்டிலேயே மாற்றிக்கொள்ளலாம்

  • May 1, 2023
  • 0 Comments

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மண்ணீரல்தான் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது. மண்ணீரல் பலவீனமாக இருந்தால் உதடு கருப்பாக இருக்கலாம். உதட்டால் தண்ணீரை வாய் வைத்துக் குடிப்பதுதான் சரி என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது. தண்ணீரைத் தூக்கி குடிக்கத் தேவையில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு […]

ஆஸ்திரேலியா

வாழ்க்கைத் தரத்தில் திருப்தியுடன் வாழும் சிட்னி குடியிருப்பாளர்கள்!

  • May 1, 2023
  • 0 Comments

உலகின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், சிட்னி குடியிருப்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தில் அதிக திருப்தியுடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1000 பேரை பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 83 சதவீதம் பேர் வாழ்க்கை நிலைமையில் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர். நியூயார்க் – லண்டன், ரொறன்ரோ போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக மதிப்பு என்பது சிறப்பம்சமாகும். எவ்வாறாயினும், 85 வீதமானோர் வாழ்க்கைச் செலவு குறித்து கவலையடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை

தீவிர பாதுகாப்பில் கொழும்பு – 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்

  • May 1, 2023
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று மே தின ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொழும்பு நகர் , […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 23 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனிய நாட்டில் மக்கள் சனத்தொகையானது 83 மில்லியன் ஆகும். அதாவது இந்த 83 மில்லியன் சனத்தொகையின் 25 சதவீதமானவர்கள் அதாவது 23 மில்லியன் மக்கள் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளதாக தெரியவந்திருக்கின்றது. தற்பொழுது ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களில் 40 சதவீதமான குடியேற்றம் நடைபெற்று உள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் இவ்வாறு […]

விளையாட்டு

2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே மோதல் – இருவர் பலி 14 பேர் காயம்

  • May 1, 2023
  • 0 Comments

கொலம்பியாவின் மெடலின் (Medellin) நகரில் 2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காயமுற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (29 ஏப்ரல்) நடந்த ஆட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிப்பென்டியென்டே டே மெடலின் (Independiente de Medellin) என்ற அணி 3-1 என அட்லட்டிக்கோ நேசியனோல் (Atletico Nacional) அணியிடம் தோற்றது. ஆட்டம் முடிந்ததும் காற்பந்து அரங்க வளாகத்தில் அந்த 2 அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கூர்மையான […]

error: Content is protected !!