வாழ்வியல்

கருமையான உதட்டை சமாளிக்க வழிகள் – வீட்டிலேயே மாற்றிக்கொள்ளலாம்

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மண்ணீரல்தான் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என அக்குபஞ்சர் மருத்துவம் சொல்கிறது.

மண்ணீரல் பலவீனமாக இருந்தால் உதடு கருப்பாக இருக்கலாம். உதட்டால் தண்ணீரை வாய் வைத்துக் குடிப்பதுதான் சரி என்றும் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது.

How To Lighten Dark Lips Naturally | Get Pink Lips | Beauty Tips in Tamil -  YouTube

தண்ணீரைத் தூக்கி குடிக்கத் தேவையில்லை. தேவையான தண்ணீர் உடலுக்கு போதும் என்று உணர்த்துவது உதடுதான். எனவே, வாய் வைத்து குடிக்கும் பழக்கம் நல்லது. உதடு தண்ணீரால் நனைந்து, உடலுக்கு தண்ணீர் போதும் என்ற சமிக்ஞையை ஏற்படுத்த தண்ணீரை வாய் வைத்துக் குடியுங்கள் எனப் பல வல்லுநர்களும் சொல்லி வருகிறார்கள்.அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.

Lighten Dark Lips With DIY Homemade Scrubs, Medical Treatments & Daily –  SkinKraft

உதடு கருப்பாக இருந்தால் என்ன அர்த்தம்?
மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், கருமையான உதட்டை சிவப்பாக மாற்ற கூடிய வழிகள்!

மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு புகைப்பழக்கம் சூரிய கதிர்களின் தாக்கம் விட்டமின் குறைபாடு அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது மருந்துகள் ஹார்மோன் பிரச்னை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டும். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

உதட்டில் உள்ள கருமை நீங்க சத்தான உணவுகள்
தினந்தோறும் கடைபிடிக்க வேண்டியவை மாதுளை திராட்சை விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள் 2-3 லிட்டர் தண்ணீர் நீர் மோர் இளநீர் பசுநெய் கலந்த உணவுகள் கீரைகள் பழச்சாறுகள்

How To Lighten Dark Lips - 10 Most Effective Remedies

கருமை நீக்கும் இயற்கை ஸ்கரப்
வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேய்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். இதைக் கொண்டு ஸ்கரப் செய்யலாம்.

லிப் பாம், லிப்ஸ்டிக் வாங்கும் முன்..
பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல. தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொகோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாம் தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம். முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் உங்களது உதட்டை ட்ரையாக்கும். எனவே முடிந்தவரைத் தவிர்க்கலாம். அல்லது லிப் பாம் பயன்படுத்திய பின் லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.

Dark lips: Causes and 5 natural remedies

எண்ணெய் வைத்தியம்
நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை வைத்தியம்
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்
இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

சாறு வைத்தியம்
வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content