ஐரோப்பா

இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற மசோதா தாக்கல்

  • June 9, 2023
  • 0 Comments

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது. அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வினியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் என […]

வட அமெரிக்கா

டெக்ஸாஸில் சரிந்து விழுந்த பூங்கா நடைபாதை – 21 பேர் படுகாயம்

  • June 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸாஸின் சர்ப்சைட் கடற்கரையில் பூங்கா உள்ளது. கடலோர காட்சிகளை ரசிக்கக்கூடிய கடலோர பொழுதுபோக்கு பகுதியான ஸ்டால்மன் பூங்காவுக்கு பலர் வருகை தருவதுண்டு. இந்த நிலையில், நேற்று ஒரு உயரமான நடைபாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிற்கு காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கை

இலங்கையர்களுக்கு குரங்கம்மை தொற்று குறித்து சுகாதார பிரிவின் விசேட அறிவிப்பு!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கையில் குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள மங்கிபொக்ஸ் நோயாளா்களின் எண்ணிக்கை நான்காக அதிகாித்துள்ளது. குரங்கம்மை தொற்று நோய் ஒருவாிடம் இருந்து பிாிதொருவருக்கு பரவுவது மிகவும் அாிதாகவே காணப்படுவதால், அது தொடா்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் சமித்த கினிகே […]

ஐரோப்பா

உக்ரைன் அணை உடைப்பு – மிக கொடூரமான செயல் – கடும் கோபத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர்

  • June 9, 2023
  • 0 Comments

நோவா ககோவ்கா பகுதியிலுள்ள ககோவ்ஸ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தெற்கு உக்ரைன் நகரமான ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா பகுதியிலுள்ள ககோவ்ஸ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டினிப்ரோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கார்சன் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் அணை உடைப்பால் 80 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அணையை தகர்த்தது ரஷ்யா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி

  • June 9, 2023
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமின் இணையதள சேவையானது முடங்கியுள்ளது. இதனால் பயனர் தாங்கள் தேடும் சுயவிவரம் (Profile) வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலால் இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் அவதிக்குக்குள்ளாகியுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பயனர்கள் தேடும் சுயவிவரத்தை மொபைல் மூலம் பகிர்ந்து, அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையதளத்தில் பார்க்கலாம்.

பொழுதுபோக்கு

விக்கி – நயன்! அதுக்குள்ள ஒரு வருசம் ஆகிட்டு!! விக்கி என்ன செஞ்சிருக்கார் பாருங்க…

  • June 9, 2023
  • 0 Comments

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், தன்னுடைய காதல் மனைவிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் . ‘நானும் ரவுடி தான்” படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா காதலித்து பின்னர் லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்தார். இருவரும் 2016 ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல், சுமார் 7 ஆண்டு காதல் ஜோடிகளாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்தனர். நிலையில், கடந்த […]

இலங்கை

இலங்கை வந்த சீனப் பிரஜை நாடு கடத்தல்!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கை வந்த சீனப் பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கினி ராஜ்ஜியத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் அண்மையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார் இதனையடுத்து, அவர் […]

ஐரோப்பா

உக்ரைனில் அணை தகர்ப்பு – நீரில் மிதக்கும் கண்ணிவெடிகளால் அச்சத்தில் மக்கள்

  • June 9, 2023
  • 0 Comments

உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா கவோவ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்ணிவெடிகள் ஆபத்து உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என செஞ்சிலுவை அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார். முன்னர் கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என எங்களிற்கு தெரிந்திருந்தது அணை தகர்ப்பிற்கு பின்னர் அவை எங்குள்ளன என்பது தெரியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலகண்ணிவெடிகள் மிதக்கும் கண்ணிவெடிகளாக மாறியுள்ளன […]

வாழ்வியல்

நகங்களுக்கு கவனிப்பு தேவை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

  • June 9, 2023
  • 0 Comments

நம்மில் சிலர் நகங்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்துவர். இந்நிலையில், உங்கள் நகங்களுக்கு கவனிப்பு தேவையா என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதனை பற்றி சில விஷயங்கள் இங்கே பார்க்கலாம்… உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், அதற்கு மிகவும் கவனம் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எளிதில் உடையக்கூடிய நகங்கள் பல்வேறு காரணஙங்களால் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய சீனா

  • June 9, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய பழங்களின் இறக்குமதியை இடைநிறுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஏறக்குறைய 02 வருடங்களாக நடைமுறையில் இருந்த அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பழ உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு நிம்மதி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி உள்ளிட்ட பல வகையான பழங்களை சீனாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் வைரஸின் தோற்றத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்ததால் சீனாவுடனான […]

error: Content is protected !!