ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 7 பேர் காயம்!

  • June 17, 2023
  • 0 Comments

மத்திய சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் ஒன்று தீப்பிடித்தில் ஏழு பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிச்சின் தென்மேற்கே உள்ள ஹூனென்பெர்க் கிராமத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பலூனில்  28 முதல் 62 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என ஏழுபேர் பயணித்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், மற்ற நான்கு பயணிகளும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் நபர்களால் மருத்துவமனைக்கு கொண்டு […]

ஆசியா

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்யும் வடகொரியா!

  • June 17, 2023
  • 0 Comments

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து வடகொரியாவில் முக்கிய அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2023 முதல் பாதியில் நாட்டின் பொருளாதார பிரச்சாரங்களை மதிப்பாய்வு செய்துள்ளதுடன்,  “மாற்றப்பட்ட சர்வதேச சூழ்நிலையை சமாளிக்க” வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உத்திகள் பற்றி விவாதித்துள்ளனர். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவிற்கு அனுப்பியதால் ஏற்பட்ட பதற்ற நிலைகளை அடுத்து இந்த மாநாடு […]

இந்தியா

வட இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் : 34 பேர் உயிரிழப்பு!

  • June 17, 2023
  • 0 Comments

வட இந்தியாவில் நிலவுகின்ற கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பெரும் பகுதியில் நிலவுகின்ற வெப்பத்தின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என வைத்தியவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், கடுமையான உடல்நலப் பாதிப்பு கொண்டவர்கள் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் […]

ஐரோப்பா

கெர்சன் பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல் : 23 பேர் காயம்!

  • June 17, 2023
  • 0 Comments

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 போர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது. “பொது மக்களுக்கு எதிராக பீரங்கி பயன்படுத்தப்பட்டது,”உள்துறை அமைச்சகம் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிதக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில்,   15,11 வயதுடை இரு ஆண்குழந்தைகளும்,   16 வயது சிறுமியும், அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனில் வேலை தருவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியர்

  • June 17, 2023
  • 0 Comments

வடக்கு லண்டனில் மசாஜ் செய்யும் தொழிலை முன்னெடுத்துவரும் இந்தியர் ஒருவர் மீது நான்கு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. தமது மசாஜ் பார்லர்கள் ஒன்றில் வேலை தருவதாக கூறி நான்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார். தற்போது 50 வயதாகும் ரகு சிங்கமனேனி என்பவர் Luton பகுதியில் வசித்து வருபவர்.இவரே வேலை தருவதாக கூறி நான்கு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர் இரண்டு மசாஜ் பார்லர்களை இருவேறு பகுதிகளில் […]

இலங்கை

மீண்டும் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா். இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

ஆதரவாளர்களை ஏமாற்றி விட்டு இரகசியமாக வெளியேறிய ட்ரம்ப் !

  • June 17, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் இடையே தமது ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, பின்னர் பணம் தராமல் உணவகத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முதலில் மியாமி நீதிமன்றம் வரை சென்ற டொனால்டு ட்ரம்ப், சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து தமது ஆதரவாளர்களுடன் Little Havana பகுதிக்கு சென்ற ட்ரம்ப் அங்குள்ள புகழ்பெற்ற Versailles உணவகத்திற்கு சென்றுள்ளார். […]

ஐரோப்பா

மேற்கு லண்டனி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

  • June 17, 2023
  • 0 Comments

மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், தங்கள் 30 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், 11 வயது சிறுமி ஒருத்தியும், மூன்று வயது சிறுவன் ஒருவனும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 3.12 மணியளவில் அந்த வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் […]

பொழுதுபோக்கு

பெண்ணை வீடியோ எடுத்து சர்ச்சையில் மாட்டிய பிரபல வில்லன்!

  • June 17, 2023
  • 0 Comments

மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகர் விநாயகன் சக பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்துவரும் விநாயகன் பல்வேறு திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாவில் அறியப்பட்ட நடிகராக இருந்துவரும் விநாயகன் மீது தற்போது பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது. கடந்த […]

இலங்கை

மாணவனின் முதுகில் தாக்கிய அதிபருக்கு நேர்ந்த நிலை

  • June 17, 2023
  • 0 Comments

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவனிடம் ஏ4 தாளினை கொண்டு வருமாறு கூறியும் அவர் கொண்டு வராமை காரணமாக அதிபர் மாணவனின் முதுகில் தாக்கியதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் அது குறித்து வினவியுள்ளனர். இதன்போது அதிபர் […]

error: Content is protected !!