ஐரோப்பா

லண்டனில் வேலை தருவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியர்

வடக்கு லண்டனில் மசாஜ் செய்யும் தொழிலை முன்னெடுத்துவரும் இந்தியர் ஒருவர் மீது நான்கு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

தமது மசாஜ் பார்லர்கள் ஒன்றில் வேலை தருவதாக கூறி நான்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார். தற்போது 50 வயதாகும் ரகு சிங்கமனேனி என்பவர் Luton பகுதியில் வசித்து வருபவர்.இவரே வேலை தருவதாக கூறி நான்கு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர் இரண்டு மசாஜ் பார்லர்களை இருவேறு பகுதிகளில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வேலைவாய்ப்பு செயலிகளில் தமது பார்லர்களில் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பி இவரை நாடும் பெண்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 17 வயதான பெண் ஒருவர் தாம் சிங்கமனேனியின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக கூறி முதல் முதலில் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.பயிற்சி அளிப்பதாக கூறி தம்மிடம் சிங்கமனேனி அத்துமீறியதாக குறித்த பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் மீண்டும் அவரது பார்லருக்கு சென்ற நிலையில் prosecco பானம் குடிக்க தந்ததாகவும், அதன் பின்னர் தம்மை ஒரு ஹொட்டலுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 has shone a light on the lack of support for domestic abuse  victims - King's College London

சம்பவம் நடத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த 17 வயது பெண் டோட்டன்ஹாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிங்கமனேனி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், 19, 17 மற்றும் 23 வயது பெண்கள் மூவரும் சிங்கமனேனி தொடர்பில் புகார் அளிக்க, மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டது.

வேலைவாய்ப்பு என்ற நம்பிக்கையில் அவரை நாடிய பெண்களை அவர் ஏமாற்றி, தமது ஆசையை தீர்த்துள்ளார் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த பெண்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்ல அஞ்சுவார்கள் எனவும் சிங்கமனேனி தவறாக புரிந்துகொண்டிருக்கலாம் எனவும், அனால் அதுவும் பொய்யாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், சிங்கமனேனி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content