வட அமெரிக்கா

முதலைக்குட்டியை இளவரசியாக பாவித்து திருமணம் செய்த மேயர்!

  • July 1, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் பழங்கால நம்பி்கையின் படி இயற்கையின் அருளை பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டார். மெக்சிகோவின் தெற்கே அமைந்துள்ள ஓக்சாக்கா மாகணத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் மொழி,கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றனர். இயற்கையின் பிரதிநிதியாக முதலையை கருதும் அவர்கள் அதனுடன் மனிதனுக்கு திருமணம் செய்துவைத்தால் இயற்கை வளங்கள் பெருக்கும் என பலநூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன்படி 7 வயது முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து […]

இலங்கை

இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையில் 61 பிரதேசங்கள்  டெங்கு அபாய வலையங்களாக இனங்காணப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது. 2023 இன் இதுவரையான காலப்பகுதியில்,  48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை

இஸ்ரேலில் தாதிய சேவை தொழில்வாய்ப்புக்காக 397 பேர் பயணம்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேலில் தாதிய சேவை தொழில்வாய்ப்புக்காக, 397 பேர் சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர். அந்தக் குழுவில் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலத்துரையாடிய மைத்திரிபால சிறிசேன

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவை சேனாதிராஜாவினுடைய மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் […]

இந்தியா

291 பயணிகளின் உயிர்பலிக்கு காரணமான ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: விசாரணையில் வெளியான தகவல்

291 பயணிகளின் உயிர்பலிக்கு காரணமான ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னலிங் மற்றும் ஆப்ரேஷன்ஸ் துறைகளைச் சேர்ந்த நிலைய பணியாளர்களின் தவறே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோதியது. இதில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் […]

இலங்கை

தேசிய கடன் மறுசீரமைப்பால் பாதிப்பு ஏற்படாது – செஹான் சேமசிங்க

  • July 1, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது. கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறுகிறது. இதன்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அவர்கள் […]

செய்தி பொழுதுபோக்கு

Zee Tamil “சரிகமப” நிகழ்ச்சியில் கலக்கப்போகும் இலங்கை சிறுமி!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜீ தமிழின் “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று காலை இந்தியா சென்றுள்ளார். இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது. இதேவேளை, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது

பொழுதுபோக்கு

‘ஹனு-மான்’ நாளை வருகின்றது புதிய அப்டேட்….

  • July 1, 2023
  • 0 Comments

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இப்படம் மே 12-ஆம் தேதி […]

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் நில அதிர்வு பதிவு!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் பு சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. அத்துடன்  கொழும்பு பத்தரமுல்ல அக்குரச காலி உட்பட பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்குள் மிகவும் ஆழமான பகுதியில் பூகம்பம் மையம்கொண்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

விசேட பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது!

  • July 1, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட பாராளுமன்ற விவாதம் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் இன்று (01.07) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை மீதான விவாதத்தின் பின்னர்இ வாக்கெடுப்பு கோரப்பட்டால்  அதை இரவு 7.30 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவும் தேசிய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. கலாநிதி ஹர்ஷ டி சில்வா […]

error: Content is protected !!