பசிலுக்கும் – ரணிலுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து ஜனாதிபதிக்கும், பசில் […]













