பொழுதுபோக்கு

கமல் படத்தில் இணையும் பிரபல 2 ஹீரோக்கள்… யார் தெரியுமா?

  • September 13, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் […]

ஐரோப்பா

புடினை சந்திக்க ரஷ்யா வந்துள்ள வட கொரிய அதிபர்…

  • September 13, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ரஷ்யா வந்துள்ளார். ஆனால், அவர் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்திக்க இருப்பதாக ரஷ்ய எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள். வட கொரியாவிலிருந்து, தனது ஆடம்பர ரயிலில் புறப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம், இரவு 11.30 மணிக்கு ரஷ்யாவிலுள்ள Vladivostok நகரை வந்தடைந்தார்.அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அமைச்சர் ஒருவர் கிம்மை வரவேற்றார். ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக […]

இலங்கை

இலங்கை ரயில் நிலையங்களில் இராணுவத்தை களமிறக்க தீர்மானம்!

  • September 13, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மற்ற ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாகவும்  திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில் கடமையாற்றும் நிலைய அதிபர்கள் மற்றும் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து வருடங்களாக காலதாமதமாக உள்ளதாக கூறப்படும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்கள் மற்றும் பதவி உயர்வுகள் […]

இலங்கை

பாணந்துறையில் தகாத உறவு காரணமாக மூவருக்கு கத்தி வெட்டு!

  • September 13, 2023
  • 0 Comments

பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் தந்தை, தாய், மகள் காயமடைந்தனர். சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் கத்தியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஐரோப்பா

பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு இரு இந்திய எழுத்தாளர்கள் தேர்வு

  • September 13, 2023
  • 0 Comments

உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிக்கும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும். பின்னர் அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதன் எழுத்தாளருக்கு சுமார் ரூ.25 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் 2023ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் `கோர்டிங் இந்தியா’ என்ற கதைக்காக இங்கிலாந்தில் […]

இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றால் இருவர் பலி!

  • September 13, 2023
  • 0 Comments

இந்தியாவின் கேரளா மாநிலத்தில்  நிபா வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்துப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிபா வைரஸால் மூளை செல்கள் அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோய் தாக்கிய பன்றிகள் மற்றும் வௌவால்கள் மூலம்  பரவுவதாகவும், அதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிப்சை உட்கொண்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி..!

  • September 13, 2023
  • 0 Comments

மிக அதிகமான காரமுள்ள சிப்சை உட்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் சாப்பிடும் சவால் என்று சிப்ஸ் நிறுவனம் ஒன்று சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளது.அதைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக அதிக காரம் நிறைந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சிப்ஸை சாப்பிட்டு விட்டு பள்ளி சென்றதாக கூறப்படும் அந்த […]

இலங்கை

இலங்கையில் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞருக்கு இழப்பீடு!

  • September 13, 2023
  • 0 Comments

ஹொரபே ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்று வரை 13 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். புகையிரத சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் 119 ரயில்கள் […]

பொழுதுபோக்கு

சிங்கம் சென்னைக்கு வந்தாச்சி…. ‘லியோ’ இசை வெளியீட்டு எப்போது?

  • September 13, 2023
  • 0 Comments

அமெரிக்கா சென்ற விஜய், சென்னை திரும்பியிருக்கிறார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் […]

அறிந்திருக்க வேண்டியவை

வெளியானது ஆப்பிள் Apple Watch – iPhone 15 சீரிஸ்

  • September 13, 2023
  • 0 Comments

நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்வாசிகளுக்கு மிகவும் பிடித்த நிறுவனம், பலரும் தாங்கள் இந்த நிறுவன போனை வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனம் புதிய மாடல் போனை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்து காத்திருந்தது போலவே, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதியதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் வெளியாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு […]

error: Content is protected !!