இலங்கை

மணல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி – இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து இன்று (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மிட்வெஸ்ட் கெவி சான்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Midwest Heavy Sands pvt Ltd) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் […]

பொழுதுபோக்கு

ரஜினி – லோகேஷ் கூட்டணி பற்றி பொது மேடையில் பேசிய கமல்… என்ன சொன்னார் தெரியுமா?

  • September 17, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் ’171’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் குறித்த தனது கருத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் ’விக்ரம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ’என்னுடைய ரசிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் எனது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தை இயக்குவது எனக்கு […]

இலங்கை

அமர்வின் போது நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது

  • September 17, 2023
  • 0 Comments

நீதிமன்ற அமர்வின் போது கடுவலை நீதவான் மீது லேசர் ஒளி பாய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில், தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு , செப்டெம்பர் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் நீதிமன்ற பதிவாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஜனித் டயஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸார் சந்தேக நபரை பரிசோதித்த போது அவரிடமிருந்து லேசர் கருவியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேக நபர் மனநலம் […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி!

  • September 17, 2023
  • 0 Comments

பிரேசிலின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பா

ஷெங்கன் விசா பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • September 17, 2023
  • 0 Comments

விசா விண்ணப்ப நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவது ஷெங்கன் விசா செயலாக்க நேரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கூறியுள்ளது. உள்துறை விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிட்டா ஹிப்பர், விசா நடைமுறையின் டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்க நேரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என்று கூறினார். அவரது கூற்றுப்படி, ஷெங்கன் விசாக்களுக்கான விண்ணப்ப நடைமுறை முழுவதுமாக ஒன்லைனில் செல்லும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. காகித விண்ணப்பங்களைக் கையாள்வது […]

ஆசியா

சிங்கப்பூரில் பல மில்லியன் பணத்தைப் பறிகொடுத்த 6,600 பேர் – மக்களுக்கு எச்சரிக்கை

  • September 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை மோசடிக் கும்பல்கள் பல உத்திகளைப் பயன்படுத்திப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்ற நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2023) ஜனவரி தொடங்கி இப்போதுவரை குறைந்தது 6,600 பேர் வேலை மோசடிக் கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்தனர். அதனால் ஏற்பட்ட நட்டம் 96.8 மில்லியன் வெள்ளி என சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசடிக்காரர்கள் முதலில் சிறு ஆய்வில் பங்கேற்குமாறு WhatsApp அல்லது Telegramஇல் தகவல் அனுப்புவார்கள். அதை முடிப்பவருக்குச் சிறு தொகையைச் சம்பளமாகக் கொடுப்பார்கள். […]

பொழுதுபோக்கு

ஜேசன் சஞ்சய் முதல் ஹீரோ இவர்தான்… அட இவரும் இருக்காரா?

  • September 17, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதனை அடுத்து ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் […]

ஐரோப்பா

போர்த்துகலில் குவியும் வெளிநாட்டவர்கள் – மகிழ்ச்சியில் அரசாங்கம்

  • September 17, 2023
  • 0 Comments

போர்த்துகலில் உள்ள விமான நிலையங்கள் ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெற்றுள்ளன. மொத்தம் ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகள், முந்தைய ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகரிப்பு பெற்றுள்ளனர். தேசிய புள்ளியியல் நிறுவனத்திற்கமைய, ஜூலை மாதத்தில் சுமார் 117,000 பயணிகள் வந்துள்ளனர், கடந்த ஆண்டு இதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட 104,300 பயணிகளாகும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தேசிய விமான நிலையங்களில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கையில் வரலாற்று உச்சமாக உள்ளதென தேசிய புள்ளியியல் […]

இலங்கை

இலங்கையில் பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

  • September 17, 2023
  • 0 Comments

சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயணப்பை ஒன்றுக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக பிறிதொரு பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு, பின்னர் பயணப்பைக்குள் இடப்பட்டு குறித்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் குளியல் தொட்டியில் 7 வயது சிறுவனின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸார்

  • September 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவனது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை மாலை 6.25 மணி அளவில் நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. அங்குள்ள இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இத்தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. தனது மகனை நல்லடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த சிறுவனின் தந்தை, முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, […]

error: Content is protected !!