இலங்கை

மணல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி – இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து இன்று (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மிட்வெஸ்ட் கெவி சான்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Midwest Heavy Sands pvt Ltd) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வழங்கிய அனுமதிக்கு முரணாக மணல் அகழப்படுவதால் கடற்கரையை அண்டி இருக்கின்ற கிராமங்கள் கடலுக்குள் உள்வாங்கப்படுகின்ற அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் மூலம் மக்களில் வாழ்வாதாரத்தை சுடண்டி தனியார் இலாபம் சம்பாதிப்பதாகவும் எதிர்கால சந்ததிக்கான இயற்கை வளம் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கருத்துக்களை தெரிவித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content